ஹிந்து மதம்: ஹிந்து மதம்: ஹிந்து மதம் என்று கூறுவது ஏற்புடையதல்ல, காரணம் ஹிந்து என்பது மதமல்ல இந்திய நிலப்பரப்பில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை முறை என்பதே சரியாகும். Hindu is not a Religion it is a Way of life என்று பலரும் கூறுவார்கள். கடந்த ஆண்டு இந்துக் களிடம் சகிப்புத்தன்மை குறைந்து வருகிறதா? என்ற தலைப்பில் தந்தி T.V. யில் பாண்டேயின் கேள்விகளுக்கு கேரளத்தின் மின்சாரத்துறை அமைச்சர் (இஸ்லாமியர்) இந்து என்பது மதம் அல்ல. வாழ்க்கை முறை என்றார். மேலும் இந்துக்களிடம் சகிப்புத்தன்மை குறைந்து இருந்தால் சுதந்திரத்திற்குப் பின்பு இந்திய நாட்டில் இவ்வளவு தேவாலங்களும், மசூதிகளும் பெருகி இருக்குமா? என்று அதிரடியாக கேள்வி எழுப்பினார். இது முற்றிலும் ஏற்புடையதுதான் என்பது யதார்த்தமான உண்மை . இந்த விசயத்தில் மற்ற நாடுகளில் உள்ள இந்துக்களின் நிலையை ஒப்பிட்டால் மற்ற நாடுகளில் வாழ்ந்த வாழ்ந்து வருகின்ற இந்துக்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வருகின்றது, இதுவும் யதார்த்தம்தான், இதற்கான காரணங்கள் என்ன?
சேதமான ஹிந்துஸ்தானம்:
“சேதம் இல்லா ஹிந்துஸ்தானம் “ வேண்டும் என்றான் பாரதி. ஆனால் ஜின்னா அவர்கள் (இஸ்லாமியர்கள்) எங்களுக்கு தனி நாடு வேண்டும் ஹிந்துஸ்தானத்தை சேதம் ஏற்படுத்தி பாகிஸ்தானை இந்தியாவிடம் இருந்து பிரித்துக்கொண்டார். அன்றைக்கு எங்களின் நாடு இந்தியாதான், பாகிஸ்தான் அல்ல என்று கூறிய இஸ்லாமியர்கள்தான் இன்று நம்மோடு இணக்கமாக சகோதரர்களாக வாழ்ந்து வருகின்றவர்கள். தற்போதைய CAB மூலம் இந்த இஸ்லாமிய சகோதரர்களுக்கு எந்த பாதிப்பும் கிடையாது என்பதை மிகத்தெளிவாக அமித்ஷா அவர்கள் கூறியுள்ளார் என்பதை நாம் கவனக்கில் கொள்ள வேண்டும்.
சுதந்திரத்திற்கு பின்பு இந்தியாவில் வாழ்கின்ற இஸ்லாமியர்கள் எண்ணிக்கைபெருகிய அளவிற்கு பாகிஸ்தான், வங்கதேசத்தில் வாழ்கின்ற சிறுபான்மை இந்துக்களின் எண்ணிகை பெருகியதா? 1941-ல் மேற்கு பாகிஸ்தானில் 20% அளவில் இருந்த இந்துக்கள் 2011-ல் 2% ஆக குறைந்துள்ளனர். வங்கத்தில் 1941-ல் 30% இருந்த இந்துக்கள் 2011 ல் 9% ஆகக்குறைந்துள்ளனர். இதே வேளையில்1941-ல் இந்தியாவில் வாழ்ந்த இஸ்லாமியர்கள் 13.4% பேர். ஆனால் 2011-ல் 14.5 % என்று உயர்துள்ளனர். காரணம் இந்துக்களிடம் இருக்கும் சகிப்புத்தன்மை, சகோதரத்துவம் என்றால் மிகையாகாதுஇதன் மூலம் 1950-ல் இந்திய பிரதமர் பண்டிட் நேருவும் பாகிஸ்தான் பிரதமர் லியாகத் அலிகானும் தங்கள் நாட்டில் உள்ள மதச்சிறுபான்மையினரைக் காப்பாற்றுவோம் என்ற ஓப்பந்தத்தை யார் சரியாகக் கடைப்பிடித்துள்ளார்கள்? எந்த நாடு கடைப்பிடித்துள்ளதுஎன்பது தெளிவாகிறது. வங்கமும் அஸ்ஸாமும்: